Monday, February 5, 2018

மாயா-70
தரணியெங்கும் நிற்கிறது
உன்
நினைவின் அடையாளம்

பருத்திகாட்டின் பூத்த
வெண் பஞ்சில் நூலெடுத்து
நெய்துகொள்கிறேன்
ஆடையாக

சரளமாகப் பேசும் என்
மொழி நீ தந்தது
பாறையென உறைந்துகிடக்கும் மௌனம் உனக்கானது

எரியும் ஜூவாலைகள்
நீ
இருட்டில் கிடக்கிறது என் வானம்

நிழல் நீர் ஊற்றி எந்த மரங்கள்
தளிர்கள் துளிர்ப்பதில்லை

ஓராயிரம் பாடல்கள்
செவிக்கூட்டில் இறங்கியபின்
உன் குரல் பாடல்கள்
என் கவலைகளை தேநீரென உறிஞ்சுகின்றன

என் நிலமெங்கும் பச்சையம் செழிக்கும் மழை
நீ