Monday, December 4, 2017

விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி நூல் குறித்து
கண்மணிராசா அவர்களின் உரை

"தேயிலை நிழலில்
உறங்குகிறது
சிறுத்தை."
இது  சோலை மாயவனின்
"விரல்களில் வழியும்
குரலற்றவனின் செங்குருதி"
நூலில் உள்ள கவிதை.
இயற்கையை சுரண்டும் நம் பேராசையின் விளைவை நடுக்கும் குரலில் பேசும் கவிதை.
சிறுத்தையென்பது சிறுத்தை மட்டும்தானா...?
அதனோடு அதன் அடர்வனமும்....காட்டாறும்..
மலைவாழ் மனிதனும்...அவர்தம் வாழ்வும்....பண்பாடும்....நிலமும்...என எல்லாமே நம்
பணத்தாசையின் கொடூர நிழலில் வாடிக்கிடப்பதை என்னவென்பது...?
தோழர்.ச.பாலமுருகனின்
சோளகர் தொட்டியில்
ஒருகாட்சி...
மலையை வெள்ளக்கார துரைக்கு சுற்றிக்காட்டிய மலைவாசியிடம் உனக்கு என்ன வேணுமோ கேள்..!
துரை தருவார்.....என்பார்கள்.
அதற்கு மலையின் மைந்தன்
"என்ன சாமி மலையே என்னுது....நீங்க என்ன தர முடியும்....!...என்பான்.
அந்த குரலை நெறிக்கும் விதமாகவே இன்று நிலைமை உள்ளது.
கூடல்...ஊடல்....இரங்கல்...
பிரிதல்...என.ஐந்திணை ஒழுக்கங்களையும் புறந்தள்ளி சுரண்டலும் சுரண்டல் நிமித்தமும் என நாம் மாறிப்போனதை தன் மெல்லிய நடுங்கும் குரலில் பேசுகின்றார் சோலை மாயவன்.
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் நூலை வெளியிட்டுள்ளது.
வாழ்த்துக்கள்....சோலை.

Your 

... 
Learn more about RevenueStripe...

   
© 

No comments:

Post a Comment