Monday, December 4, 2017


ரேவதிமுகில் அவர்களின்
எலக்ட்ரா முன் வைத்து
------------------
சோலைமாயவன்
-------------------------
சமூகத்தில் வெளியில் பெண்களின் இருத்தலை முன்னிறுத்தும் கவிதைகளின் நீட்சியாக
இந்த தொகுப்பு விளங்குகிறது

அழகான கவிதைகளுக்கு அணிந்துரை எழுவது அத்தனைஎளிதல்ல என்பதை ரேவதி முகிலின் எலக்ட்ரா கவிதைத் தொகுப்பினை வாசித்த பிறகே உணர்ந்துகொண்டேன் கவிஞர் க. பாலபாரதியின் வரியை நானும் வழிமொழிகிறேன்

இத்தொகுப்பில் விரிந்து கிடக்கும் ஒரு கவிதைக்கூட தவிர்க்கவே முடியாது
ஒவ்வொரு கவிதைக்குள் முன் வைக்கும் நுட்பமான அரசியலை புரிந்து கொள்ள முடிகிறது

ஆண்களின் ஒழுகத்தை பகடி செய்யும் மூன்றுகவிதை  இத்தொகுப்பில் சேர்த்து இருகிறார் 
பிறர் மனை நோக்கா  பேராண்மை என்றும் கூறும் வள்ளுவரின்  காலம் தொடங்கி நவீன காலம் வரை ஆண் மனதின் வக்கிரங்களை தனது கவிதையின் வழியாக கேள்விக்கு உட்படுத்துகிறார் ஆண் என்றும் நினைக்கும் பொழுது வெட்கி தலைக்குனிந்து நிற்கின்றேன்

 குமட்டல்
----------------
நடுரோட்டில்
குடல்சிதறி
பல்லிளித்துப் பரப்பிக்கிடக்கும்
நாயின் நினைவுதான் வருகிறது
காதலில் கசிந்துருகிக் கிடந்த
என்னை முகர்ந்துகொண்டே
நண்பனின் மனைவியைவருணித்த
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்

வாக்குமூலம்
--------------------
காமம் சுரக்கும் மாலை வேளைகளில்
நினைவுக்கு வரும் முகங்களில்ஒன்றுகூட
உன்னுடையதாயில்லை

----------------------
 இத்தொகுப்பின் தலைப்பு
எலக்ட்ரா
:(கிரேக்கத் தொன்மத்தில் வரும் பெண்
பெண் குழந்தைக்கு தன் தந்தையின் மீது ஏற்படும் ஈர்ப்பு 
இவள் பெயராலேயே எலெக்ட்ரா காம்ப்ளக்ஸ் என்று அழைக்கப்படுகிறது)

எலெக்ட்ரா என்பது பெண் அது மட்டுமல் தன் உடல்மீது நட்சத்திரங்கள் ஒளிரும் பெண் நாம் கற்பனை செய்து கொள்வோம்


--------------------


பெண்கள் வாழ்வியல் சித்தரிக்கும் கவிதை ஒவ்வொன்றும் இச்சமூகத்தின் விழும் சாட்டை அடியின் நுனி கோபத்தின் வெளிப்பாடு

பணத்திற்காவும் நகைக்காவும் அடித்து விரட்டும் புருஷனிடம் எப்படி தான் வருடம் தவறாமல் குழந்தைகளை மட்டும் எப்படி பெற்றுக்கொள்ள முடிகிறது
----------------
மனைவி இறந்தது நடக்கவே முடியாத தன்
பெண் குழந்தை தவிர்த்துவிட்டு இன்னொரு திருமணத்திற்கு தயாராகும்வுஅப்பா 

இரு வருடமாகியும் வராத அப்பா

புதுவீடு கட்டிக்கொச்டிருப்பதாய்ச்
சொல்லிச் சென்றார்
பரிதாப்ப்பட்டுப் பார்க்க வந்த
பக்கத்து வீட்டுப்பாட்டி

அப்பா கட்டிய புதுவீட்டுக்கு
நடந்துவசெல்வதாய்க் கனவு கண்டு
உறங்கிக்கொண்டிருக்கிறாள் ஆனந்தி

கட்டிய புது வீட்டில்
அடுத்த முதலிரவுக்குத்
தயாராகிக் கொண்டிருக்கிறார்
அப்பா
------------+

 பெண் 
 மனதில்  உருவாகும் வன்முறை இல்லாத  சித்திரக் கதைகளில் பெண்கள் ஏன் தேவதையாக வர்ணிக்கிறார் என்ற அர்த்தம் அழுத்தமாக பதிகிறது
தெரிந்த அண்ணன் ஒருவர் அவர் எல்லா விரல்கள் கொண்டு விசில் அடிப்பார் ஒவ்வொரு விரல் கொண்டு விசில்அடிக்கும் பொழுது எல்லையற்ற ஆனந்தம் அடைவோம் அது போல நம் கவிஞர் ரேவதி முகில் அவர்கள் எல்லாப் பாடுபொருள்களையும் கவிதை மிக மிக நேர்த்திய  நெய்து இருக்கிறார் சாட்சியாக
இரண்டு கவிதைகள்

ரகசிய வனாந்திரங்களில் மண்டிய தாழம்புதர்கள் தாழம்புதர்கள்
மடலவிழ்க்கும் ஆளரவமற்ற பொழுதுகளில்
ஊர்ந்து வரத் துவங்குகிற அரவத்திற்குக்
கள்வத்திலூறிய பச்சைக் கண்கள்
தாழைக் கள்ளுண்ட பித்தேறி முறுக்கிய
நெளியுடலமெங்கும் முண்டிக்கிளம்பும் ப்ரக்ஞை
பிணைச்சாரைக்கானது
பிணையலின் பேராவல் சுழன்றடிக்கும் 
புலனைந்தின் ஊழிமூச்சில் கொதியுலையின் கொந்தளிப்பு
உடுக்கள் சிதறுண்ட கருவிசும்பில் பரவும் 
வெப்பத் தகிப்பில் பழுக்கக் காய்கிறது பவுர்ணமி
பற்றியெரிகிறது தாழங்காடு
கனிந்துகொண்டிருக்கும்
ஏதேன் தோட்டத்துச் செங்காயில்
நஞ்சேற்றத் துவங்குகிறாள் இச்சாதாரி


மிருகம் என்ற தலைப்பில் ஒரு கவிதை
சிறுத்தையென்ற நம்பிக்கையில்
மரமேறிக்கொண்டிருக்கிற பூனையைத்
தரையிறக்கப்
போதுமானதாக இருக்கிறது
ஒரு சிறிய எலி


கவிதை எப்பொழுதுமக்களால் கொண்டாடப்படும் என்றால் வாசிக்கும்
 கணத்திலிருந்து அவனுக்குள் ஒரு உரையாடலை நிகழ்த்தும்எனில் மக்களுக்கான கவிதையாகிறது கவிஞர் மக்கள் கவிஞராகிறார் அவ்வகையில் என்னுள் பல்வேறுஉரையாடலை
நிகழ்த்திய கவிதை படைத்திருக்கிறார் 
அதில் ஒன்று
துப்புரவு ஒழுகு  தலைப்பில் வரும்

வெகுநாட்களுக்குப் பிந்தைய சந்திப்பிலும்
வழக்கம் போலவே நினைவூட்டினேன் உனக்கு
எங்கள் வீட்டுப் புழக்கடையிலிருந்து
உன் தாத்தா மலம் அள்ளிச் சென்றாய்
என் தாத்தா சொன்னதை
எங்கள் தெருவின் சாக்கடையை
உன் அப்பா சுத்தம் செய்ததை
உன் சீருடையிலிருந்து
மலநாற்றம் வருவதாய்க்
கேலி செய்ததை
முறைத்தது முறைத்தாவாக்கில்
வழக்கம் போலவே மௌனமாய் இருந்தாய்
தற்போதையை நமது வேலை தொழிலைப்பற்றி
கேட்டுக்கொள்ளவேயில்லை
நீயும் நானும்
நானும் மறந்தும் கூட சொல்லவில்லை
அந்தப் பெருநகரத்தின் 
அடுக்குடமாடிக் குடியிருப்பொன்றில்
இருக்குமர என் வீட்டின்
நான்கு கழிவறைகளையும் சுத்தம் செய்வது
நான்தான் என்பதை


 இக்கவிதைக்குள் இயங்குகின்ற பொருள் எனக்குள் பல தேடலை உருவாக்கியது
1. கழிவறைகளை சுத்தம் செய்வது
2.குப்பைகளை அள்ளுவது
3.செப்டி டேங்க் சரிசெய்வது
இன்னும் பட்டியல்கள் நீளுகின்றன
ஒவ்வொரு நகரத்தின் அதிகலையில் கைகளில் எவ்வித பாதுகாப்பு இல்லாமல் குப்பை அள்ளும் கழிவு நீர் வாய்களை சரி செய்யும் மனிதர்களை நாம் சந்த்திருப்போம் 
21நூற்றாண்டென பீற்றிக்கொள்ளும் நாம் சகமனிதனுக்கு செய்யுகின்ற மிகப்பெரிய துரோகம் அல்லவா
இக்கவிதை இரண்டு செய்திகளை தருகின்றன
1.அடிமட்ட வேலைகளை செய்வது யார் யார்
1.ஒடுக்கப்பட்ட மக்கள்
2.பெண்கள்
இந்த நிலைக்கு என்ன காரணம் நாம் பின்பற்றுகின்றன சாதிய மனநிலை தான் என்பதை புரிந்து கொள்ள வேன்டும்


இன்னும் இத்தொகுப்பில் ஏரளமாக கவிதைகளை நாம் 
 காட்டலாம் 
இவர் கவிதைக்கு சூட்டிய தலைப்புகள் வாசகனுக்கு கவிதைக்குள் நுழைவதற்கு ஒரு திறவுகோலாக அமைகின்றன 
கடைசியாக மிஸ்டர் சுப்பிரமணி என்ற தலைப்பில் வரும் ஒரு பெண்களில் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு அங்கே அவளின் உடலும் மீதுஉள்ளத்தின் மீது காலம் காலமாக நடைபெற்று இச்சமூகத்தின் முகத்திரையை நார் நாராய் கிழிக்கப்படுகிறது

No comments:

Post a Comment