Friday, December 29, 2017

அய்யா இரா எட்வின் அவர்களின் முகநூலில் இருந்து நன்றி அய்யா வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத அளவு காய்ச்சல். படுத்தபடியும்,சுவற்றில் கால்நீட்டி சாய்ந்தபடியுமாக கழியும் எனது இன்றை ஆசீர்வவதிக்க தூங்கவிடாது என்னை அலைக்கழிக்கும் சோலைமாயவன் எழுதிய “தேயிலை நிழலில் உறங்குகிறது வனமிழந்த சிறுத்தை” என்ற குட்டிக்கவிதை போதுமானதாயிருக்கிறது. (சரியா எழுதியிருக்கேனா மாயவன்?) ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் உரையாடலை ஓரிடத்தில் கவிதைப்படுத்தி இருப்பார். கவிதையை தர முயற்சிக்கிறேன். ”மழை இரவொன்றில் துண்டில் சோறு கொண்டுவந்த என்னிடம் மகள் கேட்டாள் “ஆண்ட வீட்ல ஏனம் ஏதும் இல்லையா?” இருந்த ஏனங்களைவிட துண்டுதான் சுத்தமா இருந்ததுஎன்றதும் சிரித்தாள் மழை கூடுதலாகப் பெய்துகொண்டிருந்தது” இந்தக் கவிதையை சரியாக வைத்திருக்கிறேனா தெரியவில்லை. டிசம்பர் 25 கடந்து ஆறு மணிநேரத்திலிருந்து என்னை அழவைத்துக் கொண்டே இருக்கிறது இந்தக் கவிதை. அணைத்து ஆசைதீர முத்தமிடுகிறேன் மாயவன்.

No comments:

Post a Comment