Saturday, December 2, 2017

கவிதை-1
நிரந்தரமாக அவ்விடத்தில்
சுருண்டு் கிடக்கன்றது
என் பால்ய மனசு
மனப்புழுக்கம் வெளியேறா நாளொன்றில்
சுவையற்ற முதல் துளியில்
என் நாவினை இறக்கி
ஆழம் பார்த்தேன்
சுழல்கள் புதைந்திருந்த அந்நதியில்
எரிந்து போன பாதிப் பிணமாக மிதந்துகிடந்தேன்
உடம்பில் ஊறிக்கிடந்த என் உழைப்பு
கையேந்திப் பழகிவிட்டது
ஆடையை உடுத்தியிருந்தும் அவமானத்தால்
குடல்கள் நிரப்பி
என்னையே மறைத்துக்கொண்டேன்
என் உடலின் உள் கட்டுமானங்கள்
உதிரத் தொடங்கிய பொழுது
என் உள்ளங்கை இரத்தம்
மரணத்தின் மாதிரியாகத் தெரிந்தது
சொற்ப நாட்களுக்குப் பிறகு
நீங்கள் மலர் வளையம் வைத்துக்
கண்ணீர் சிந்தி
இன்றுடன் மூன்றாவது ஆண்டு
நிறைவடைகிறது
அந்தக் கடையை
எரித்து விடுங்கள்
என்னை போன்று என் மகனுக்கும்
மன அழுத்தம் துளிர்க்கத் தொடங்குகிறது

No comments:

Post a Comment