Monday, December 4, 2017

கவிஞர் கரிகாலன் உரை


சோலைமாயவன் என்றொரு 
கவிச் சகோதரன்!
💚
அது ஒரு பழையகாலத்து அய்யர் கட்டிய விடுதி.வீடு போலவுமிருந்தது.லாட்ஜ் போலவுமிருந்தது.நேரங்கெட்ட நேரத்தில் அங்கு ஸ்ரீயோடு போனபோது அம்சப்பிரியா இருந்தார்.'நாங்கள் மேனேஜ் பண்ணிக்
கிறோம்.நீங்க போங்க!' என அவரை அனுப்பிவைத்தோம்.
பொள்ளாச்சி ஈரமாக  இருந்தது.புது இடம்
போலவே தோன்றாமல் தூங்கிபோனோம்.
எல்லா நகரங்களிலும் காலையில் டீக்கடைகளை தேடுபவன்.காலற நடப்பது, புது நகரில் எதிர்பாராமல் வந்துவிட்ட மழைக்கு ஒதுங்குவது, சூடாக டீயைக் குடிப்பதெல்லாம் மேலான அனுபவங்கள்.
மீண்டும் அறைக்குள் வந்து குளித்து கிளம்
பிக்கொண்டிருந்தபோது சோலைமாயவன் வந்தார்.எளிமையான வெள்ளெந்தியானத் தோற்றம்.அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது 'விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி' தொகுப்பைக் கொடுத்தார்.
'எத்தனை காப்பி போட்டீங்க?' என்றேன்.
ஆயிரம் என்றார்.எனக்கு திகைப்பாகவும் பொறாமையாகவும் இருந்தது. இதை அதீத தன்னம்பிக்கை என்பதா? தன்கவிதைகள்மீது  அவர் கொண்ட காதலென்பதா?
தெரியவில்லை.  இன்றுதான் அவரது தொகுப்பை வாசிக்க நேரம் கிடைத்தது.
தமிழ்நிலத்தின்மீது தமிழர்கள்மீது அக்கறை கொண்ட கவிதைகள்.நமது நிலங்கள்,
ஆறுகள், வனங்கள்அழிந்த போனதன் அவல அரசியலை கண்ணீரோடு கடக்கும் கவிதை
களிவை.தண்டவாளங்களில் மனிதர்களைப் பலியிடும் சாதித்தீண்டாமையை நெஞ்சு சுட பேசும் கவிதைகளிவை.மனிதர்களின் நெஞ்சாங்கூட்டுக்குள் ஈரத்தைச் சுரக்க
வைத்து மனசுக்குள் ஒரு மழைப்பொழிவை நிகழ்த்திப்பார்க்கும் ஆர்வத்தோடு எழுதப்பட்ட கவிதைகளிவை.
சோலைமாயவன் போன்றவர்கள் பிஎஃப் லோன்போட்டு ஒரு ப்ளாட் வாங்காமல் மனைவிக்கு ஒரு ஆரம் வாங்கித்தராமல் ஏன் கவிதைப் புத்தகம் போடுகிறார்கள்?
கவிஞராவதற்கா? கவிஞனை அப்படி பெரிதாய் நாம் வாழும் சமூகம் மதிக்கிறதா என்ன!
ஆனாலும் சோலைமாயவன் தான் சந்திக்கும் சக ஊழியர்களிடம், நண்பர்களிடம் தனது தொகுப்பை கொடுக்கிறார்.ஒரு டீ வாங்கிக் கொடுப்பதை சந்தோஷமாக ஏற்றுக்
கொள்ளும் தமிழ்ச்சமூகம் தனக்கு ஒருவர் கவிதைப் புத்தகம் கொடுப்பதை எப்படி மகிழ்
ந்தேற்க தெரிந்திருக்க வேண்டும்.
நலங்கிள்ளி,நெடுங்கிள்ளி, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் போன்ற மன்னர்
களெல்லாம் இடித்துரைத்த கோவூர்கீழார் எனும் புலவர் சொல் கேட்டு பழியிலிருந்து தம்மைக் காத்துக் கொண்டவர்கள்.
அத்தகைய கவிவம்சத்தின் தோன்றலே சோலைமாயவன் போன்றோரும்.
கண்டிப்பாக அடுத்தும் அவர் பி.எஃப் லோன் போட்டு கவிதைத் தொகுப்பு போடுவார்.
ஆனாலும் தமிழர்கள் ஏழைகள். 1000 தாங்கமாட்டார்கள்.வாங்கமாட்டார்கள்.300 போதும் சோலைமாயவன்!கவிதைப் புத்தகம் தங்கக்காசைவிட மேலானது. அதை எனக்கு
கூட சும்மா கொடுக்கக்கூடாது.நான் கொடுக்கமாட்டேன்.
உங்கள் கவிதை எழுதும் விரல்கள் சாதாரண
மானவையில்லை.அதில் மூவாயாரம் ஆண்டு தமிழ்க்கவிகளின் ஆவி குடிகொண்டிருக்
கிறது.வாழ்த்துக்கள் சோலை மாயவன்!

No comments:

Post a Comment