Friday, December 29, 2017

அய்யா இரா எட்வின் அவர்களின் முகநூலில் இருந்து நன்றி அய்யா வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத அளவு காய்ச்சல். படுத்தபடியும்,சுவற்றில் கால்நீட்டி சாய்ந்தபடியுமாக கழியும் எனது இன்றை ஆசீர்வவதிக்க தூங்கவிடாது என்னை அலைக்கழிக்கும் சோலைமாயவன் எழுதிய “தேயிலை நிழலில் உறங்குகிறது வனமிழந்த சிறுத்தை” என்ற குட்டிக்கவிதை போதுமானதாயிருக்கிறது. (சரியா எழுதியிருக்கேனா மாயவன்?) ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் உரையாடலை ஓரிடத்தில் கவிதைப்படுத்தி இருப்பார். கவிதையை தர முயற்சிக்கிறேன். ”மழை இரவொன்றில் துண்டில் சோறு கொண்டுவந்த என்னிடம் மகள் கேட்டாள் “ஆண்ட வீட்ல ஏனம் ஏதும் இல்லையா?” இருந்த ஏனங்களைவிட துண்டுதான் சுத்தமா இருந்ததுஎன்றதும் சிரித்தாள் மழை கூடுதலாகப் பெய்துகொண்டிருந்தது” இந்தக் கவிதையை சரியாக வைத்திருக்கிறேனா தெரியவில்லை. டிசம்பர் 25 கடந்து ஆறு மணிநேரத்திலிருந்து என்னை அழவைத்துக் கொண்டே இருக்கிறது இந்தக் கவிதை. அணைத்து ஆசைதீர முத்தமிடுகிறேன் மாயவன்.

கூடு

பழுத்த இலைகள் உதிரா அம்மரத்தின் கிளையின் நுனியில் தூக்கணாங்குருவியின் கூடொன்று காற்று வீசும் நாலாத் திசைதோறும் அலைந்து கொண்டிருந்தது தாய்க்குருவி இல்லா அக்கூட்டில் பயத்தின் காரணமாக பதட்டத்தின்காரணமாக பாதுகாப்பு இன்மை காரணமாக குஞ்சுகளின் இரைச்சல் வழக்கத்தை விடக்கூடுதலாக இருந்தது என் ஆழ்மனம் தாய்க்குருவியின் சிறகுகளாகப் படபடத்துக் கிடக்கிறது வழிப்போக்கர்களின் கல்லும் ஒரு கண்ணும் கூட்டை பதம் பார்க்கின்றன அவசரம் ஒரு பேயாய் அறைந்து தள்ளுகிறது குஞ்சுகளின் இரைச்சல் குறைந்து கொண்டபொழுது என் வீட்டை அடைந்திருந்தேன் நாளை விடியட்டுமென தாய்க்குருவி வந்திருக்க வேண்டுமென என் பேராசை மூச்சுக்காற்றால் வெந்துகொண்டிருந்த்தேன் நான் சோலைமாயவன் 29-12-2017 11.15pm

Monday, December 4, 2017

கவிஞர் கரிகாலன் உரை


சோலைமாயவன் என்றொரு 
கவிச் சகோதரன்!
💚
அது ஒரு பழையகாலத்து அய்யர் கட்டிய விடுதி.வீடு போலவுமிருந்தது.லாட்ஜ் போலவுமிருந்தது.நேரங்கெட்ட நேரத்தில் அங்கு ஸ்ரீயோடு போனபோது அம்சப்பிரியா இருந்தார்.'நாங்கள் மேனேஜ் பண்ணிக்
கிறோம்.நீங்க போங்க!' என அவரை அனுப்பிவைத்தோம்.
பொள்ளாச்சி ஈரமாக  இருந்தது.புது இடம்
போலவே தோன்றாமல் தூங்கிபோனோம்.
எல்லா நகரங்களிலும் காலையில் டீக்கடைகளை தேடுபவன்.காலற நடப்பது, புது நகரில் எதிர்பாராமல் வந்துவிட்ட மழைக்கு ஒதுங்குவது, சூடாக டீயைக் குடிப்பதெல்லாம் மேலான அனுபவங்கள்.
மீண்டும் அறைக்குள் வந்து குளித்து கிளம்
பிக்கொண்டிருந்தபோது சோலைமாயவன் வந்தார்.எளிமையான வெள்ளெந்தியானத் தோற்றம்.அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது 'விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி' தொகுப்பைக் கொடுத்தார்.
'எத்தனை காப்பி போட்டீங்க?' என்றேன்.
ஆயிரம் என்றார்.எனக்கு திகைப்பாகவும் பொறாமையாகவும் இருந்தது. இதை அதீத தன்னம்பிக்கை என்பதா? தன்கவிதைகள்மீது  அவர் கொண்ட காதலென்பதா?
தெரியவில்லை.  இன்றுதான் அவரது தொகுப்பை வாசிக்க நேரம் கிடைத்தது.
தமிழ்நிலத்தின்மீது தமிழர்கள்மீது அக்கறை கொண்ட கவிதைகள்.நமது நிலங்கள்,
ஆறுகள், வனங்கள்அழிந்த போனதன் அவல அரசியலை கண்ணீரோடு கடக்கும் கவிதை
களிவை.தண்டவாளங்களில் மனிதர்களைப் பலியிடும் சாதித்தீண்டாமையை நெஞ்சு சுட பேசும் கவிதைகளிவை.மனிதர்களின் நெஞ்சாங்கூட்டுக்குள் ஈரத்தைச் சுரக்க
வைத்து மனசுக்குள் ஒரு மழைப்பொழிவை நிகழ்த்திப்பார்க்கும் ஆர்வத்தோடு எழுதப்பட்ட கவிதைகளிவை.
சோலைமாயவன் போன்றவர்கள் பிஎஃப் லோன்போட்டு ஒரு ப்ளாட் வாங்காமல் மனைவிக்கு ஒரு ஆரம் வாங்கித்தராமல் ஏன் கவிதைப் புத்தகம் போடுகிறார்கள்?
கவிஞராவதற்கா? கவிஞனை அப்படி பெரிதாய் நாம் வாழும் சமூகம் மதிக்கிறதா என்ன!
ஆனாலும் சோலைமாயவன் தான் சந்திக்கும் சக ஊழியர்களிடம், நண்பர்களிடம் தனது தொகுப்பை கொடுக்கிறார்.ஒரு டீ வாங்கிக் கொடுப்பதை சந்தோஷமாக ஏற்றுக்
கொள்ளும் தமிழ்ச்சமூகம் தனக்கு ஒருவர் கவிதைப் புத்தகம் கொடுப்பதை எப்படி மகிழ்
ந்தேற்க தெரிந்திருக்க வேண்டும்.
நலங்கிள்ளி,நெடுங்கிள்ளி, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் போன்ற மன்னர்
களெல்லாம் இடித்துரைத்த கோவூர்கீழார் எனும் புலவர் சொல் கேட்டு பழியிலிருந்து தம்மைக் காத்துக் கொண்டவர்கள்.
அத்தகைய கவிவம்சத்தின் தோன்றலே சோலைமாயவன் போன்றோரும்.
கண்டிப்பாக அடுத்தும் அவர் பி.எஃப் லோன் போட்டு கவிதைத் தொகுப்பு போடுவார்.
ஆனாலும் தமிழர்கள் ஏழைகள். 1000 தாங்கமாட்டார்கள்.வாங்கமாட்டார்கள்.300 போதும் சோலைமாயவன்!கவிதைப் புத்தகம் தங்கக்காசைவிட மேலானது. அதை எனக்கு
கூட சும்மா கொடுக்கக்கூடாது.நான் கொடுக்கமாட்டேன்.
உங்கள் கவிதை எழுதும் விரல்கள் சாதாரண
மானவையில்லை.அதில் மூவாயாரம் ஆண்டு தமிழ்க்கவிகளின் ஆவி குடிகொண்டிருக்
கிறது.வாழ்த்துக்கள் சோலை மாயவன்!

ரேவதிமுகில் அவர்களின்
எலக்ட்ரா முன் வைத்து
------------------
சோலைமாயவன்
-------------------------
சமூகத்தில் வெளியில் பெண்களின் இருத்தலை முன்னிறுத்தும் கவிதைகளின் நீட்சியாக
இந்த தொகுப்பு விளங்குகிறது

அழகான கவிதைகளுக்கு அணிந்துரை எழுவது அத்தனைஎளிதல்ல என்பதை ரேவதி முகிலின் எலக்ட்ரா கவிதைத் தொகுப்பினை வாசித்த பிறகே உணர்ந்துகொண்டேன் கவிஞர் க. பாலபாரதியின் வரியை நானும் வழிமொழிகிறேன்

இத்தொகுப்பில் விரிந்து கிடக்கும் ஒரு கவிதைக்கூட தவிர்க்கவே முடியாது
ஒவ்வொரு கவிதைக்குள் முன் வைக்கும் நுட்பமான அரசியலை புரிந்து கொள்ள முடிகிறது

ஆண்களின் ஒழுகத்தை பகடி செய்யும் மூன்றுகவிதை  இத்தொகுப்பில் சேர்த்து இருகிறார் 
பிறர் மனை நோக்கா  பேராண்மை என்றும் கூறும் வள்ளுவரின்  காலம் தொடங்கி நவீன காலம் வரை ஆண் மனதின் வக்கிரங்களை தனது கவிதையின் வழியாக கேள்விக்கு உட்படுத்துகிறார் ஆண் என்றும் நினைக்கும் பொழுது வெட்கி தலைக்குனிந்து நிற்கின்றேன்

 குமட்டல்
----------------
நடுரோட்டில்
குடல்சிதறி
பல்லிளித்துப் பரப்பிக்கிடக்கும்
நாயின் நினைவுதான் வருகிறது
காதலில் கசிந்துருகிக் கிடந்த
என்னை முகர்ந்துகொண்டே
நண்பனின் மனைவியைவருணித்த
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்

வாக்குமூலம்
--------------------
காமம் சுரக்கும் மாலை வேளைகளில்
நினைவுக்கு வரும் முகங்களில்ஒன்றுகூட
உன்னுடையதாயில்லை

----------------------
 இத்தொகுப்பின் தலைப்பு
எலக்ட்ரா
:(கிரேக்கத் தொன்மத்தில் வரும் பெண்
பெண் குழந்தைக்கு தன் தந்தையின் மீது ஏற்படும் ஈர்ப்பு 
இவள் பெயராலேயே எலெக்ட்ரா காம்ப்ளக்ஸ் என்று அழைக்கப்படுகிறது)

எலெக்ட்ரா என்பது பெண் அது மட்டுமல் தன் உடல்மீது நட்சத்திரங்கள் ஒளிரும் பெண் நாம் கற்பனை செய்து கொள்வோம்


--------------------


பெண்கள் வாழ்வியல் சித்தரிக்கும் கவிதை ஒவ்வொன்றும் இச்சமூகத்தின் விழும் சாட்டை அடியின் நுனி கோபத்தின் வெளிப்பாடு

பணத்திற்காவும் நகைக்காவும் அடித்து விரட்டும் புருஷனிடம் எப்படி தான் வருடம் தவறாமல் குழந்தைகளை மட்டும் எப்படி பெற்றுக்கொள்ள முடிகிறது
----------------
மனைவி இறந்தது நடக்கவே முடியாத தன்
பெண் குழந்தை தவிர்த்துவிட்டு இன்னொரு திருமணத்திற்கு தயாராகும்வுஅப்பா 

இரு வருடமாகியும் வராத அப்பா

புதுவீடு கட்டிக்கொச்டிருப்பதாய்ச்
சொல்லிச் சென்றார்
பரிதாப்ப்பட்டுப் பார்க்க வந்த
பக்கத்து வீட்டுப்பாட்டி

அப்பா கட்டிய புதுவீட்டுக்கு
நடந்துவசெல்வதாய்க் கனவு கண்டு
உறங்கிக்கொண்டிருக்கிறாள் ஆனந்தி

கட்டிய புது வீட்டில்
அடுத்த முதலிரவுக்குத்
தயாராகிக் கொண்டிருக்கிறார்
அப்பா
------------+

 பெண் 
 மனதில்  உருவாகும் வன்முறை இல்லாத  சித்திரக் கதைகளில் பெண்கள் ஏன் தேவதையாக வர்ணிக்கிறார் என்ற அர்த்தம் அழுத்தமாக பதிகிறது
தெரிந்த அண்ணன் ஒருவர் அவர் எல்லா விரல்கள் கொண்டு விசில் அடிப்பார் ஒவ்வொரு விரல் கொண்டு விசில்அடிக்கும் பொழுது எல்லையற்ற ஆனந்தம் அடைவோம் அது போல நம் கவிஞர் ரேவதி முகில் அவர்கள் எல்லாப் பாடுபொருள்களையும் கவிதை மிக மிக நேர்த்திய  நெய்து இருக்கிறார் சாட்சியாக
இரண்டு கவிதைகள்

ரகசிய வனாந்திரங்களில் மண்டிய தாழம்புதர்கள் தாழம்புதர்கள்
மடலவிழ்க்கும் ஆளரவமற்ற பொழுதுகளில்
ஊர்ந்து வரத் துவங்குகிற அரவத்திற்குக்
கள்வத்திலூறிய பச்சைக் கண்கள்
தாழைக் கள்ளுண்ட பித்தேறி முறுக்கிய
நெளியுடலமெங்கும் முண்டிக்கிளம்பும் ப்ரக்ஞை
பிணைச்சாரைக்கானது
பிணையலின் பேராவல் சுழன்றடிக்கும் 
புலனைந்தின் ஊழிமூச்சில் கொதியுலையின் கொந்தளிப்பு
உடுக்கள் சிதறுண்ட கருவிசும்பில் பரவும் 
வெப்பத் தகிப்பில் பழுக்கக் காய்கிறது பவுர்ணமி
பற்றியெரிகிறது தாழங்காடு
கனிந்துகொண்டிருக்கும்
ஏதேன் தோட்டத்துச் செங்காயில்
நஞ்சேற்றத் துவங்குகிறாள் இச்சாதாரி


மிருகம் என்ற தலைப்பில் ஒரு கவிதை
சிறுத்தையென்ற நம்பிக்கையில்
மரமேறிக்கொண்டிருக்கிற பூனையைத்
தரையிறக்கப்
போதுமானதாக இருக்கிறது
ஒரு சிறிய எலி


கவிதை எப்பொழுதுமக்களால் கொண்டாடப்படும் என்றால் வாசிக்கும்
 கணத்திலிருந்து அவனுக்குள் ஒரு உரையாடலை நிகழ்த்தும்எனில் மக்களுக்கான கவிதையாகிறது கவிஞர் மக்கள் கவிஞராகிறார் அவ்வகையில் என்னுள் பல்வேறுஉரையாடலை
நிகழ்த்திய கவிதை படைத்திருக்கிறார் 
அதில் ஒன்று
துப்புரவு ஒழுகு  தலைப்பில் வரும்

வெகுநாட்களுக்குப் பிந்தைய சந்திப்பிலும்
வழக்கம் போலவே நினைவூட்டினேன் உனக்கு
எங்கள் வீட்டுப் புழக்கடையிலிருந்து
உன் தாத்தா மலம் அள்ளிச் சென்றாய்
என் தாத்தா சொன்னதை
எங்கள் தெருவின் சாக்கடையை
உன் அப்பா சுத்தம் செய்ததை
உன் சீருடையிலிருந்து
மலநாற்றம் வருவதாய்க்
கேலி செய்ததை
முறைத்தது முறைத்தாவாக்கில்
வழக்கம் போலவே மௌனமாய் இருந்தாய்
தற்போதையை நமது வேலை தொழிலைப்பற்றி
கேட்டுக்கொள்ளவேயில்லை
நீயும் நானும்
நானும் மறந்தும் கூட சொல்லவில்லை
அந்தப் பெருநகரத்தின் 
அடுக்குடமாடிக் குடியிருப்பொன்றில்
இருக்குமர என் வீட்டின்
நான்கு கழிவறைகளையும் சுத்தம் செய்வது
நான்தான் என்பதை


 இக்கவிதைக்குள் இயங்குகின்ற பொருள் எனக்குள் பல தேடலை உருவாக்கியது
1. கழிவறைகளை சுத்தம் செய்வது
2.குப்பைகளை அள்ளுவது
3.செப்டி டேங்க் சரிசெய்வது
இன்னும் பட்டியல்கள் நீளுகின்றன
ஒவ்வொரு நகரத்தின் அதிகலையில் கைகளில் எவ்வித பாதுகாப்பு இல்லாமல் குப்பை அள்ளும் கழிவு நீர் வாய்களை சரி செய்யும் மனிதர்களை நாம் சந்த்திருப்போம் 
21நூற்றாண்டென பீற்றிக்கொள்ளும் நாம் சகமனிதனுக்கு செய்யுகின்ற மிகப்பெரிய துரோகம் அல்லவா
இக்கவிதை இரண்டு செய்திகளை தருகின்றன
1.அடிமட்ட வேலைகளை செய்வது யார் யார்
1.ஒடுக்கப்பட்ட மக்கள்
2.பெண்கள்
இந்த நிலைக்கு என்ன காரணம் நாம் பின்பற்றுகின்றன சாதிய மனநிலை தான் என்பதை புரிந்து கொள்ள வேன்டும்


இன்னும் இத்தொகுப்பில் ஏரளமாக கவிதைகளை நாம் 
 காட்டலாம் 
இவர் கவிதைக்கு சூட்டிய தலைப்புகள் வாசகனுக்கு கவிதைக்குள் நுழைவதற்கு ஒரு திறவுகோலாக அமைகின்றன 
கடைசியாக மிஸ்டர் சுப்பிரமணி என்ற தலைப்பில் வரும் ஒரு பெண்களில் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு அங்கே அவளின் உடலும் மீதுஉள்ளத்தின் மீது காலம் காலமாக நடைபெற்று இச்சமூகத்தின் முகத்திரையை நார் நாராய் கிழிக்கப்படுகிறது
விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி நூல் குறித்து
கண்மணிராசா அவர்களின் உரை

"தேயிலை நிழலில்
உறங்குகிறது
சிறுத்தை."
இது  சோலை மாயவனின்
"விரல்களில் வழியும்
குரலற்றவனின் செங்குருதி"
நூலில் உள்ள கவிதை.
இயற்கையை சுரண்டும் நம் பேராசையின் விளைவை நடுக்கும் குரலில் பேசும் கவிதை.
சிறுத்தையென்பது சிறுத்தை மட்டும்தானா...?
அதனோடு அதன் அடர்வனமும்....காட்டாறும்..
மலைவாழ் மனிதனும்...அவர்தம் வாழ்வும்....பண்பாடும்....நிலமும்...என எல்லாமே நம்
பணத்தாசையின் கொடூர நிழலில் வாடிக்கிடப்பதை என்னவென்பது...?
தோழர்.ச.பாலமுருகனின்
சோளகர் தொட்டியில்
ஒருகாட்சி...
மலையை வெள்ளக்கார துரைக்கு சுற்றிக்காட்டிய மலைவாசியிடம் உனக்கு என்ன வேணுமோ கேள்..!
துரை தருவார்.....என்பார்கள்.
அதற்கு மலையின் மைந்தன்
"என்ன சாமி மலையே என்னுது....நீங்க என்ன தர முடியும்....!...என்பான்.
அந்த குரலை நெறிக்கும் விதமாகவே இன்று நிலைமை உள்ளது.
கூடல்...ஊடல்....இரங்கல்...
பிரிதல்...என.ஐந்திணை ஒழுக்கங்களையும் புறந்தள்ளி சுரண்டலும் சுரண்டல் நிமித்தமும் என நாம் மாறிப்போனதை தன் மெல்லிய நடுங்கும் குரலில் பேசுகின்றார் சோலை மாயவன்.
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் நூலை வெளியிட்டுள்ளது.
வாழ்த்துக்கள்....சோலை.

Your 

... 
Learn more about RevenueStripe...

   
© 
மாயா-67
சிறகுகளின் மேலாடை பீய்த்திருந்த
இரவுகிளியொன்று
என் அறைக்குள் தஞ்சம்
அடைந்தது

அதன் அலகுகளில்
கூடுதல் சிவப்பு இருந்தது

நகங்கள் மழுங்கிய கால்களில்
வறண்ட ஆற்றின் ஈரமில்லாத மணல்துகள்கள் உதிர்ந்தன

பசியென கண்களுக்குள்
கூர்மையான கருவேல முட்களாய் என்னை
குத்தத்தொடங்கியன

அழும் குழந்தையின்
பசி போக்க தன் விரலை
சப்ப கொடுக்கும் தாயென
சிறிதுசிறிதாக நறுக்கப்பட்ட
கனிகளாக அதன் முன்னே
படுத்துக்கிடக்கிறேன்

முதல் துண்டை விழுங்கிய
பின்
சிறகுகளில் காட்டின் வாசம்
துளிர்க்க தொடங்கியது

என் படுக்கை அறையில்
நான் இல்லாமல் இருந்தேன்

சூரிய கதிர்களால் என் பகல திறக்க
வனத்தின் மரக்கிளையில்
தன் அலகுகளை துவட்ட
வானமெங்கும்  கமழ்ந்த்து
கனியின் மணம்
மாயா-63
தார்ச்சாலையில் இருந்து
சற்று
கீழறங்கி மண் பாதையில்
உன் நினைப்பில்
நடந்து போகிறேன்

 புற்களின் முகத்தில்
முத்தென தளும்பி நிற்கிறது
சற்றுமுன் பெய்த
மழையின் இசைகோர்வை

உள்ளங்காலில் நனைந்த
ஈரம்
மனதுக்குள் தேநீர் வாசம்
பூப்பெய்துகிறது

சிந்தனைக்குள் முழ்கி
நான்
பாதசாரியாக பயணிக்கிறேன்

பல கிளைகள் கொண்ட
மரத்தின் இலைகளில்
நின்ற
பூமிக்குள் விழாத
மழைத்திவலை
என் உதட்டின் நடுவில்
உன் முத்தமென விழுகிறது

மரக்கிளைகளில் தங்கிய
நீரினை தேடி
பறக்கிறேன்
நானொரு பகல்பறவையாகிறேன்
மாயா

Saturday, December 2, 2017

மாயா-81
வெள்ளைநிறப்பூக்கள் குலுங்கும் தாயின்அணைப்புகளாய் பச்சையிலைகளின் நிழல்கள்  நிற்கும்
அம்மரத்தின் கீழ் நின்றிருந்தேன்

அவ்வழியாக சென்ற
பேருந்திலிருந்து ஜன்னல் மேல்
உன்
நெருடலற்ற பார்வையின்
ஸ்பரிசம் என்னை திகைக்கச்செய்த்து

எனக்கான வெளிச்சப் பாதையைக்கண்டேன்
எனக்கான ஆதரவு நீட்டும்
கருவிழி கைகளைக் கண்டேன்
எனக்கான மௌன நீர்க்கண்டேன்
எனக்கான பசி தீர்க்கும் அமுதம் கண்டேன்
எனக்கான கருமேகம் கண்டேன்
எனக்கான ஆடை தரும்
எனக்கான ஆடைநெய்யும் தறியை கண்டேன்
எனக்கான  பெருகும் சுனையை கண்டேன்
எனக்கான வாழ்வியல் தேசம் கண்டேன்
எனக்கான போர் மூளும் இரு வாள் கண்டேன்
மீண்டும் வரும்
இச்சாலையில்
நானொரு மரமாய் நிற்ப்பேன்
உனக்கான நிழல் விரித்து
மாயா
மாயா-84
இந்த ஆண்டிற்குள்
எட்டாவது முறையாக
ஆவி பறக்கும்
தேநீர் நிரம்பிய குவளைகளை  கைகளில்
ஏந்தி
பந்தங்கள் சூழ பதற்றம்
நெருப்பென படர
நிற்கிறேன்

பஞ்சுமிட்டாய் சேலை உடுத்தி
தலையெல்லாம் மறைய
மல்லிக்கை பூக்கள் சூடி
அக்கம்பக்கம் நகைகளை
கடன் வாங்கி அணிந்து
நீ தான் வருகிறாயென
இரவெல்லாம் கனவுகளில்
என்னை இழந்து போகிறேன்

அலங்கரிக்கப்பட்ட பொம்மையென நின்று
ஏமாற்றும் மிஞ்சும் போது
கண்களில் குளம் தேங்குகிறது

பொய்யாக நின்று
பொய்யாக சிரித்து
பொய்யாக பேசி
பொய்யாக அலங்காரம் செய்து
பொய்யாக வெட்கப்பட்டு
பொய்யாக பதில் சொல்லி
திரும்ப திரும்ப
ஒரே மாதிரி நடித்துக்கொண்டிருக்கிறேன்
பெண் பார்க்கும் நாடகத்தில்

போன முறை பொங்கலுக்கு நீ வந்த பொழுது
வீட்டின் தோட்டத்தில் நிலவு சாட்சியாக
என் உதட்டில் சமைத்த பொங்கல் இன்னும் இனிக்குதுதடா

உனக்காக ஜென்மம் காத்திருப்பேன்
மாயா-83
அப்படி
ஒன்று எளிதானதல்ல
நீ இல்லாத வாழ்க்கையை
நகர்த்துவது

சக்கரத்தில் நசுங்கிய
எலுமிச்சை பழமென
வெடித்துக்கிடக்கிறேன் நான்

தண்ணீருக்குள் குறி பார்த்து வீசும் கோல்
தண்ணீரைத் தொட்டதும்
திசைமாறி போவது போல்
எந்த சொற்களுக்கும் என்
மனம் செவி சாய்ப்பதில்லை

உன் நினைவுக்குள் முழ்கி
மிதவையென மிதக்க
அதிகாரங்கள் காலடி கிடக்கின்றன

திரும்ப திரும்ப
ஒரே தவறை செய்வதாகவும்
திரும்ப திரும்ப ஒரே வார்த்தையையே சொல்லுவதாகவும்
என் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன

கோடைகாலத்திற்குப்பின்
வரும்
வடகிழக்கு பருவமழைக்கு காத்திருக்கும் வேரென
உன் நினைவுபூமிக்குள்
புதைந்துகிடக்கிறேன்
மாயா
மாயா-85
மூன்றாவதுபிளவாக
வெடிக்கத் தொடங்கியது
பாறையொன்று

முதல் பிளவிலிருந்து
வெணமை நிறம் பொருந்திய வாத்து
மேலே வந்த்து
உன்
றெக்கையிலிருந்து இறகொன்றைஎடுத்து
அதன் உடல் முழுக்க
ஒளிர்கதிர்களை பொருத்தி சூரியனாக வானத்தில் பறக்கவிட்டாய்

இரண்டாவாது பிளவிலிருந்து கருநிறபந்தொன்று  கைகளில் தவழ்ந்து உன்
கண்களில் இருந்து சிறுதுளி ஒளியை அதனுள் பாய்ச்சிகிறாய் நிலவென ஆகாயத்தின் உச்சியில் ஒளிர்ந்து

மூன்றாவது பிளவிருந்து வரிசை படையெடுத்த
ஒவ்வொன்றையும்
மழையென
நட்சத்திரங்களென
மேகமென
இரவென
பகலென
அனைத்திற்கும் உன் சிறகுகளிலிருந்து உயிர்பித்தாய்
நீ றெக்கையற்ற பறவையென பூமியாய்
பறந்திருக்கிறாய்

நீ
படைத்தவைகள்
பருவங்கள் தோறும்
உன்னிடம் சரண் அடைகின்றன மாயா
மாயா-60
பெருத்த மலைபாம்பென
நீண்டுகிடக்கும்
உன் வீட்டின் மதில் மேல்
சிறுகுருவியென
அமருகிறேன்

கண்ணாடிசுவர்களால்
எழுப்பட்ட
பல அடுக்கு அறைகள் கொண்ட உனது வாழ்விடம்
தேடி வந்திருக்கிறேன்

தண்ணீரில் மிதக்கும்
ஆகாயமென
உன் உருவம்-எனக்கான
முத்தமொன்னை
பறக்க எத்தனிக்கிறாய்

 வைரங்களென ஜொலிக்கும் கண்ணாடி சுவரி்ல் மோதிய
முத்தம் தானியங்களாக
என்னிடம் தஞ்சம் அடைகின்றன

நீர் வழிந்தோடும்
ஆற்றோர வயற்காட்டில்
முத்தப்பூக்களை நடவு
செய்கிறேன்

தனக்கான வண்ணங்களை சேகரித்து கொள்கின்றன வண்ணப்பூச்சிகள்

உன்
முத்தப்பூவின் சூடிச்செல்லும் ஆறு பருவமெய்தி பெண்ணின் முகமென ஒளிருகின்றது
மாயா
மாயா-74
சூரியனின் கதிர்கள்
தலைதூக்க*அல்வா*
*அல்வா*
*அல்வா*
பே கமிஸனுக்கு குழு அமைப்பது அல்வாக் கொடுக்கும் வேலை. நான் நம்ப மாட்டேன். முதலில் ஜூன் என்பார்கள். பிறகு, இந்தக்குழுவின் காலம் நீட்டிக்கப்படும். கடைசியில் *பட்டை நாமம்* தான்.

மே மாதம் நடைபெறும் உள்ளாட்சித்தேர்தலுக்கு இந்த அல்வா கொடுக்கப் படுகிறது. இது போல எத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கு???? சி.பி.எஸ் குழு என்ன ஆச்சு?? விளைவு பூஜ்யம்.

சென்ற முறை, *கலைஞர் அய்யா* குழு அமைத்தால் லேட் ஆகுமே என்று இடைக்கால நிவாரணம் 1,2,3 என்று அடிப்படை ஊதியத்தில் 10% தொகையை interim relief ஆக 3 முறை கொடுத்தார். கிட்டத்தட்ட 30% உயர்வு கிடைத்தது.
*அப்படி செய்யுங்க நம்புறோம்*இல்லாடி நம்ப மாட்டோம் விடாமல்
இரவிலிருந்து பொழிகிறது
நல்மழை

படிகட்டுகளில் ஏறிட ததும்பும் நீர்கள்
வாசலில் சிறு குளமென
முகாம் போட்டு இருக்கின்றன

கண்களென கூர்மையொடு பொருந்திய
கத்திக்கப்பலை
மிதக்க விடுகிறேன்

நகர மறுத்து
கற்சிலையென நிற்கிறது

உயிர்பெறும் சூட்சம் வழிதெரியாமல்
பெருமழையில் கரைகின்றன என் கண்ணீரும்

கத்திக்கப்பலில் காதருகே
மூன்றாவது முறையாக
உன் பெயரை உச்சரிக்க
என் முகத்தில் மழையை
வாரி இறைத்தபடி
சிறுகடலில் தன் பயணத்தை தொடங்கியது
உன் பெயர் சூட்டப்பட்ட
கத்திக்கப்பல்
கவிதை-1
நிரந்தரமாக அவ்விடத்தில்
சுருண்டு் கிடக்கன்றது
என் பால்ய மனசு
மனப்புழுக்கம் வெளியேறா நாளொன்றில்
சுவையற்ற முதல் துளியில்
என் நாவினை இறக்கி
ஆழம் பார்த்தேன்
சுழல்கள் புதைந்திருந்த அந்நதியில்
எரிந்து போன பாதிப் பிணமாக மிதந்துகிடந்தேன்
உடம்பில் ஊறிக்கிடந்த என் உழைப்பு
கையேந்திப் பழகிவிட்டது
ஆடையை உடுத்தியிருந்தும் அவமானத்தால்
குடல்கள் நிரப்பி
என்னையே மறைத்துக்கொண்டேன்
என் உடலின் உள் கட்டுமானங்கள்
உதிரத் தொடங்கிய பொழுது
என் உள்ளங்கை இரத்தம்
மரணத்தின் மாதிரியாகத் தெரிந்தது
சொற்ப நாட்களுக்குப் பிறகு
நீங்கள் மலர் வளையம் வைத்துக்
கண்ணீர் சிந்தி
இன்றுடன் மூன்றாவது ஆண்டு
நிறைவடைகிறது
அந்தக் கடையை
எரித்து விடுங்கள்
என்னை போன்று என் மகனுக்கும்
மன அழுத்தம் துளிர்க்கத் தொடங்குகிறது

Friday, December 1, 2017

மாயா-82
அதிக அளவு நீர் பிடிக்கும்
அண்டாவில்
கழுத்தளவு  தண்ணீரை நிரப்பி
வண்ணகலர் பொடி தூவி
முழங்கையையால்
நுரைப்பொங்கி வழியும் வரை கலக்கிய பின்
அவ்வாடையை
இரண்டுமணி காலவெளியளவில் ஊற வைத்து காத்திருத்தலுக்குப்பின்
விரிந்த கல்லின் மீது
நையப்புடைத்து
ஒரு முறைக்கு இருமுறையாக தூய நன்னீரில் அலசி அலசி
நண்பகல் வெயிலில் ஈரம் காய வாட்டி வதங்கிய பின்
சாயங்காலத்தின் முன்
முகர்ந்து பார்க்கிறேன்
நீ
வெள்ளைச்சட்டையோடு
அழுத்தி நெஞ்சில் பதிந்த
முத்தத்தின் வாசனை
அப்படியே மணந்த்து
மாயா